காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பத்தூர் அருகே காதலித்து திருமணம் செய்த இளம்பெண் ஒரு மாதத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே காதலித்து திருமணம் செய்த இளம்பெண் ஒரு மாதத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
திருப்பத்தூர் அருகே உள்ள கரியம்பட்டியை அடுத்த பாப்பானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மேகநாதன் (வயது 22). பெங்களூருவில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
வாணியம்பாடி டவுன் கரீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இதயக்கனி (20). திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.
இவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போது காதலித்து வந்துள்ளனர். பின்னர் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இதனால் இருவரும் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர். நேற்று மதியம் வீட்டிற்கு வெளியே அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நேரத்தில் இதயக்கனி வீட்டிற்குள் சென்று துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து இதயக்கனியை மீட்டு உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து இதயக்கனியின் தாய் கெஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் சப்- கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story