வருவாய், காவல்துறை சார்பில் குறைகேட்பு கூட்டம்
வருவாய், காவல்துறை சார்பில் குறைகேட்பு கூட்டம்
அரக்கோணம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சோகனூர் கிராமத்தில் பொதுமக்களிடம் வருவாய் மற்றும் காவல்துறை சார்பில் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் இரட்டைக் கொலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்கவும், நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தவும், கழிவு நீர் கால்வாய், குடிநீர் வசதி, இப்பகுதிக்கு தனியாக ரேஷன் கடை, நூலகம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை விடுத்தனர்.
தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து விரைவில் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிட நல தனித்துணை கலெக்டர் இளவரசி, மாவட்ட வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் செந்தில்குமார், அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ், போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்திகணேஷ், தாசில்தார் பழனிராஜன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story