உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை


உளுந்தூர்பேட்டை அருகே  திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 7 Sept 2021 11:44 PM IST (Updated: 7 Sept 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியர் விசாரணை

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பின்னல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 25) தொழிலாளி. இவரது மனைவி சோனியா(22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. கார்த்திக்(1) என்ற ஆண் குழந்தை உள்ளது.  திருமணமான நாளில் இருந்து கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சோனியா வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை தூக்கில் இருந்து இறக்கி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சோனியாக பரிதாபமாக இறந்தார். இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் சோனியா தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி  கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story