நித்தியானந்தாவின் ராசிபுரம் பெண் சீடர் சொந்த ஊர் வந்தது எப்படி


நித்தியானந்தாவின் ராசிபுரம் பெண் சீடர் சொந்த ஊர் வந்தது எப்படி
x
தினத்தந்தி 7 Sept 2021 11:59 PM IST (Updated: 7 Sept 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

நித்தியானந்தாவின் ராசிபுரம் பெண் சீடர் சொந்த ஊர் வந்தது எப்படி

ராசிபுரம், செப்.8-
நித்தியானந்தாவின் ராசிபுரம் பெண் சீடர் சொந்த ஊர் வந்தது எப்படி என்பது குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நித்தியானந்தா சீடர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி. இவருடைய மனைவி அத்தாயி (வயது 52). இவர், நித்தியானந்தாவின் தீவிர பக்தர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளிறேி பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்துக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே அவரை பலமுறை ஊருக்கு அழைத்தும் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அவருடைய கணவர், தன்னுடைய மனைவியை மீட்டுத்தரும்படி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு புகார் மனு அளித்தார். அப்படி இருந்தும் அவர் மீட்கப்படவில்லை.
சொந்த ஊர் வந்தார்
இதற்கிடையே அத்தாயி பெயரில் இருந்த வீடு சொந்த ஊரில் ஜப்தி நடவடிக்கைக்கு வந்ததாக தெரிகிறது. இதுபற்றி அத்தாயிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், ஆசிரமத்தில் தன்னை விட மறுக்கிறார்கள் என்று கூறி வந்துள்ளார். இந்த நிலையில் அத்தாயினுடைய மகன் வழி பேத்தி செல்போனில் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அப்போது அவரது மழலை பேச்சும், வீட்டுக்கு வரும்படி பாட்டியை கெஞ்சி கேட்டுக் கொண்டதும் அத்தாயிக்கு பேத்தியை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. 
உடனே சொந்த ஊருக்கு வந்து பேத்தியை பார்க்க முடிவு செய்தார். அதற்காக தன்னுடன் 2 பெண் சீடர்களை அழைத்துக் கொண்டு ராசிபுரம் வந்தார். வந்த இடத்தில் அத்தாயியை மட்டும் மீட்டு விட்டு மற்ற 2 பெண் சீடர்களையும் அங்குள்ளவர்கள் விரட்டி அடித்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது அத்தாயி தன்னுடைய பேத்தி மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உள்ளார். அவர், அங்கிருந்து சொந்த ஊர் வந்தது குறித்து குடும்பத்தினருடன் உருக்கமாக பேசிவருவதாக தெரிகிறது.

Next Story