முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்


முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2021 1:24 AM IST (Updated: 8 Sept 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறி முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

கரூர்,
விநாயகர் சதுர்த்தியையொட்டி அஞ்சல் அட்டை மூலம் தமிழக முதல்-அமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதையடுத்து கரூர் மாவட்ட பா.ஜனதா சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக முதல்-அமைச்சருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பா.ஜனதாவினர் கலந்து கொண்டு முதல்-அமைச்சருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் என கூறிய அஞ்சல் அட்டையை அனுப்பினர். இதில் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன், தொழில் வளர்ச்சி பிரிவு தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story