தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2021 1:28 AM IST (Updated: 8 Sept 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, செப்.8-
டெல்லியில் கடந்த வாரம் பெண் காவலரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர் தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சையது ஜாகீர், துணைத்தலைவர் முகமது ரபிக், துணைச் செயலாளர்கள் ரசூல் மைதீன், முகமது பிலால், லால் பாஷா, நபில் பாஷா மற்றும் திரளான முஸ்லிம் பெண்களும் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

Next Story