ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 8 Sept 2021 2:07 AM IST (Updated: 8 Sept 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு போனது.

அருப்புக்கோட்டை, 
மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி செல்வராணி (வயது 30). இவர் பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- 
நான் மதுரையில் இருந்து பந்தல்குடிக்கு தனியார் பஸ்சில் வந்து கொண்டு இருந்தேன். அப்போது கல்குறிச்சியில் பஸ் நின்ற போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் 2  குழந்தைகளுடன் பஸ்சில் ஏறினார். பின்னர் அந்த பெண், எனது  இருக்கை அருகே வந்து நின்று ெகாண்டு இருந்தார். இந்தநிலையில் அந்த பெண் தன் கையில் இருந்த சில்லரைகளை கீழே சிதறவிட்டு அதனை என்னை எடுத்து தருமாறு கூறினார். நானும் சில்லறையை எடுத்து கொடுத்தேன். பின்னர் அந்த பெண் பாளையம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கி சென்று விட்டார். அப்போது என்னிடம் இருந்த பை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த பையில் 7 பவுன் நகை உள்ளது.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story