மாவட்ட செய்திகள்

தொழிலாளி மர்ம சாவு + "||" + death

தொழிலாளி மர்ம சாவு

தொழிலாளி மர்ம சாவு
சிவகாசியில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ளடி.மானகசேரி கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 47). இவர் நதிக்குடியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலையா சாப்பிட உட்கார்ந்த போது திடீரென ரத்தவாந்தி எடுத்துள்ளார். பின்னர் அருகில் இருந்த சக தொழிலாளிகள் அவரை மீட்டு டி.மானகசேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், பாலையா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தீயில் கருகி இளம்பெண் சாவு
மதுரையில் தீயில் கருகி இளம்பெண் பலியானார்.
2. குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
3. லாரி மோதி தொழிலாளி சாவு
லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
4. மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கணவன் பலி
அருப்புக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கணவன் பலியானார்.
5. சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி
சிவகாசியில் தாய் கண் முன் சரக்கு வாகனம் ேமாதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.