மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியரின்வங்கி கணக்கில் இருந்து ரூ.2¾ லட்சம் திருட்டுசைபர் கிரைம் போலீசார் விசாரணை + "||" + Rs 2¾ lakh theft

அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியரின்வங்கி கணக்கில் இருந்து ரூ.2¾ லட்சம் திருட்டுசைபர் கிரைம் போலீசார் விசாரணை

அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியரின்வங்கி கணக்கில் இருந்து ரூ.2¾ லட்சம் திருட்டுசைபர் கிரைம் போலீசார் விசாரணை
அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2¾ லட்சம் திருட்டு போனது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 48). டாக்டரான இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த 2-ந்தேதி ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இதனால் அந்த செயலியை அவர் பதிவிறக்கம் செய்து உள்ளார். அதன் பிறகு அவருடைய வங்கி கணக்கு மற்றும் பணபரிமாற்ற செயலி மூலம் மொத்தம் ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்து 345-த்தை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளவரசன் இதுபற்றி தர்மபுரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.