சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் நிபா வைரசை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நிபா வைரசை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நிபா வைரஸ்
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அந்த அளவிற்கு பல நாடுகளில் பாதிப்பு இருந்தது. ஒரு சில நாடுகள் இந்த பாதிப்பில் இருந்து மீண்டுள்ளன. ஆனால் இந்தியாவில் தமிழகம், கேரளா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகிறவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
தடுப்பூசி சான்று இருக்க வேண்டும். அல்லது 24 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் சான்று என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் 12 வயது சிறுவன் நிபா வைரசுக்கு பலியாகியுள்ளான். இதுபோல் கொரோனா பாதிப்பும் அந்த சிறுவனுக்கு இருந்துள்ளது.
சிறப்பு குழு அமைப்பு
இதனைத்தொடர்ந்து அந்த சிறுவன் உடன் இருந்த 200 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 2 பேருக்கு லேசான அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நிபா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைகேரளாவை இணைக்கும் ஒன்பதாறுசின்னாறு சோதனைசாவடியில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதுபோல் திருப்பூர் மாவட்டத்தில் நிபா வைரசை தடுப்பதற்கு என ஒரு சிறப்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது
நிபா வைரஸ் தடுப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் சோதனை சாவடி வழியாக வருகிறவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகள் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்று போன்றவை இருக்கிறதா என்பதை கண்காணிப்பார்கள். கேரளாவில் இருந்து வருகிறவர்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதற்கான தனியாக ஒரு பதிவேடும் தயார் செய்யப்பட்டுள்ளது. என்றனர்.
-----------
Related Tags :
Next Story