பாரதிய கிசான் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாரதிய கிசான் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், செப்.9-
தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கத்தின் சார்பில் விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமை தாங்கினார். விவசாய விளை பொருட்கள் அனைத்துக்கும் இடுபொருள் செலவை கணக்கிட்டு லாபகரமான விலை அறிவிக்க வேண்டும். பாலை விவசாய விளைபொருளாக அறிவித்து லாபகரமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அமராவதி அணையை தூர்வாரி, பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு வாய்க்கால்களை தூர்வார வேண்டும். சின்ன வெங்காய ஏற்றுமதி மண்டலமாக திருப்பூரை அறிவிக்க வேண்டும். தேங்காய் கொப்பரைக்கு அதிகபட்ச விலையாக ரூ.150 அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் சேனாபதி, பொருளாளர் திருமலைசாமி, கோட்ட பொறுப்பாளர் அருள்பிரகாசம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை திருப்பூர் கலெக்டர் வினீத்திடம் கொடுத்து முறையிட்டனர்.
குறிப்பு படம் உண்டு.
-
Related Tags :
Next Story