கீழ்பென்னாத்தூர் பகுதியில் ஆசிரியை, மாணவர்களுக்கு கொரோனா. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
ஆசிரியை, மாணவர்களுக்கு கொரோனா
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மேக்களூர், வழுதலங்குணம் ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடமாடும் மருத்துவக் குழுவினரால் கொரோனா தோற்று பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 2 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தலா 2 மாணவர்கள் என 4 பேருக்கும், சோமாசிபாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்றுபாதித்த 5 பேரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தலின் பேரில், 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டன. கொரோனா பாதித்த பள்ளிகளில் சுகாதார நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Related Tags :
Next Story