வாக்காளர் பட்டியல் 15-ந்தேதி வெளியீடு
நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் வாக்காளர் பட்டியல் 15-ந்தேதி வெளியிடப்பட்ட உள்ளது என்று கலெக்டர் கூறியுள்ளார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீர் ஆதாரத் திட்டத்தின் கீழ் மஞ்சளாறு வடிநிலக் கோட்டம், வராகநதி மற்றும் மஞ்சளாறு உபவடிநிலப் பகுதிகளில் புதிதாக 11 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சங்கங்களுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தல் நடத்துவதற்காக நில உடைமையாளர்களின் பட்டியல், வாக்காளர் பட்டியல் ஆகியவை சங்கங்கள் வாரியாக தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா அலுவலகம், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக அறிவிப்பு பலகையில் வருகிற 15-ந்தேதி வெளியிடப்பட்டு ஒரு வார காலத்துக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, ஆட்சேபனை தொடர்பாக இந்த அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். ஆட்சேபனை எழாத பட்சத்தில் இதுவே இறுதி வாக்காளர் பட்டியலாக முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story