ஆறுமுகநேரி அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்
ஆறுமுகநேரி அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி வரவேற்று பேசினார்.
திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார். ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி, வக்கீல் விஜி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் ஆகியோர் பேசினர்.
Related Tags :
Next Story