கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 62 ஆயிரத்து 595 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 40 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் திருவண்ணாமலையில் இருந்து குறிஞ்சிப்பாடி வந்த ஒருவருக்கும், நோய்த்தொற்று பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 4 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 35 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 61 ஆயிரத்து 323 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 49 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் இது வரை 842 பேர் உயிரிழந்த நிலையில், . நேற்று மூதாட்டி ஒருவர் பலியானார்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
மூதாட்டி பலி
சிதம்பரத்தை சேர்ந்த 64 வயது மூதாட்டி கொரோனா பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 843 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதித்த 368 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 52 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதி 9 ஆக குறைந்தது.
Related Tags :
Next Story