கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Sept 2021 10:25 PM IST (Updated: 8 Sept 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நிறுத்தி வைத்திருந்த காரில் திடீரென்று தீப்பிடித்தது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க உறவினர்கள், நண்பர்கள் கார்களில் வந்தனர். அதில் பொள்ளாச்சியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது காரை, மண்டபத்தின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்தநிலையில் திடீரென அந்த காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது.

 இதையடுத்து சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் காரின் அருகில் நின்று பேசி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். 


ஆனால் அதற்குள் அங்கு இருந்த மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் தீப்பிடித்ததில் கார் முற்றிலும் நாசமானது. மேலும் இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story