கொடைக்கானல் கோர்ட்டில் முதியவர் சரண்


கொடைக்கானல் கோர்ட்டில் முதியவர் சரண்
x
தினத்தந்தி 8 Sept 2021 10:36 PM IST (Updated: 8 Sept 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

புலியின் பற்கள், நகங்களை விற்ற வழக்கு தொடர்பாக கொடைக்கானல் கோர்ட்டில் முதியவர் ஒருவர் சரண் அடைந்தார்.

கொடைக்கானல்: 

கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் கடந்த மார்ச் மாதம் புலியின் நகங்கள் மற்றும் பற்களை விற்றதாக 2 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், புலியின் நகங்கள் மற்றும் பற்களை கூக்கால் கிராமத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (வயது 65) என்பவரிடம் அவர்கள் வாங்கியது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை பிடிக்க கூக்கால் கிராமத்துக்கு வனத்துறையினர் சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவானார். இதையடுத்து வனத்துறையினர் தனிப்படை அமைத்து கல்யாண சுந்தரத்தை தேடி வந்தனர்.

 இந்நிலையில் நேற்று அவர் கொடைக்கானல் கோர்ட்டில் நீதிபதி தினேஷ்குமார் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை 15 காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து வனத்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story