பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி திருவாரூரில், இந்திய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்


பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி திருவாரூரில், இந்திய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sep 2021 5:08 PM GMT (Updated: 8 Sep 2021 5:08 PM GMT)

பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட கோரி திருவாரூரில் இந்திய மாதர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்கள் 33 சதவீதம் இடஓதுக்கீடு பெறுவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற தனி தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி, திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு இந்திய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமயந்தி தலைமை தாங்கினார்.

இதில், மாவட்ட தலைவர் சுலோக்சனா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் பாஸ்கரவள்ளி, தமிழ்செல்வி ராஜா, கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், மன்னார்குடி ஒன்றிய துணைத் தலைவர் வனிதா அருள்ராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பூபதி, விஜயா, உஷா, மீனாம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 33 சதவீதம் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story