அங்காடியில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் வலியுறுத்தல்


அங்காடியில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Sept 2021 10:43 PM IST (Updated: 8 Sept 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

பழங்களத்தூர் கிராமத்தில் அங்காடியில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் ஒன்றியம் பழங்களத்தூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது கிளை மாநாடு கட்சி உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் புதிய கிளை செயலாளராக எ.செல்லத்துரை தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டினை தொடங்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் கே.கைலாசம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.ஜான்கென்னடி டி.அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் மாநாட்டு நிறைவுரையாற்றினார்.

தரமான பொருட்கள்

மாநாட்டில், பழங்களத்தூரில் வெண்ணாற்றங்கரையில் படித்துறை கட்ட வேண்டும். அங்காடியில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும். பழங்களத்தூரில் பள்ளி கட்டிடம் அருகில் குடிநீர் தொட்டி பராமரித்து பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

பழங்களத்தூரில் காலனி தெருவில் அங்கன்வாடி அருகில் சிறிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story