தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகத்தினர்  ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2021 10:57 PM IST (Updated: 8 Sept 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

கண்டாச்சிமங்கலம், 

டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி சபியா சாவுக்கு நீதி கேட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய அரசை கண்டித்து தியாகதுருகம் பஸ்நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பசல் முகமது தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர் ஓசூர் நவ்சாத் கண்டன உரையாற்றினார்.
இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது அலி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் முகமது ஈசா, பொருளாளர் ஜஹாங்கிர்பாஷா, சமூகநீதி மாணவர் இயக்க மாவட்ட செயலாளர் அமீத் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் சையத் சைப் நன்றி கூறினார். 
கொரோனா தொற்று காலத்தில் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகர தலைவர் சையத் சைப் உள்ளிட்ட 70 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story