ஆட்டோ மீது லாரி மோதி2 பேர் பரிதாப சாவு
குருபரப்பள்ளி அருகே லாரி மோதி 2 பேர்பலியாயினர்.
குருபரப்பள்ளி, செப்.9-
குருபரப்பள்ளி அருகே லாரி மோதி 2 பேர்பலியாயினர்.
கார்- ஆட்டோ மோதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மேலுமலை பக்கமாக நேற்று இரவு ஆட்டோ ஒன்று கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி முன்னால் சென்று கொண்டிருந்த கார் மற்றும் ஆட்டோ மீது மோதியது.
2 பேர் பலி
இதில் ஆட்டோவில் சென்ற நவீன் மற்றும் ஜாபர் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்கள் 2 பேரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். விபத்து குறித்துதகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story