சாலையோரம் நின்றகாட்டு யானையால் பரபரப்பு


சாலையோரம் நின்றகாட்டு யானையால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Sept 2021 11:04 PM IST (Updated: 8 Sept 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

சாலையோரம் நின்றகாட்டு யானையால் பரபரப்பு

தேன்கனிகோட்டை, செப்.9-
தேன்கனிக்கோட்டையில் சாலையோரம் நின்ற காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த யானையை பட்டாசு வெடித்து வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.
காட்டு யானை
தேன்கனிகோட்டை அருகேயுள்ள மரக்கட்டா வனப்பகுதியில் காட்டுயானைகள், மான்கள், காட்டுஎருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்கின்றன.
இந்தநிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, சாலையோரம் நீண்டநேரம் நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அந்த வழியாக செல்லவே தயக்கம் காட்டினர். இந்ததகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுக்குள் விரட்டினர்
இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிகோட்டை வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக மரக்கட்டா வனப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.
அங்கு பட்டாசு வெடித்து சாலையோரம் நின்ற காட்டு யானையை விரட்டினர். பட்டாசு சத்தம் கேட்டு யானை அடர்ந்த காட்டுக்குள் ஓட்டம் பிடித்தது. அதன்பிறகு அந்த வழியாக சென்றவர்கள் நிம்மதி பெருமூச்சுஅடைந்தனர்.

Next Story