தடுப்பூசி போடாதவர்களின் கடைகளுக்கு ‘சீல்’. திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
தடுப்பூசி போடாதவர்களின் கடைகளுக்கு ‘சீல்’
திருப்பத்தூர்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வணிக நிறுவன உரிமையாளர்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொண்டு சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் பி.ஏகாராஜ், திருப்பத்தூர் ஆலங்காயம் ரோடு, நகை கடை பஜார், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோவில் சென்று மைக் மூலம் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
மேலும் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு சான்றிதழ் இருக்க வேண்டும். இல்லை என்றால் கடைகளை மூடி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். தடுப்பூசி போடாதவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் விவேக் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story