முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 8 Sept 2021 11:10 PM IST (Updated: 8 Sept 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தேவகோட்டை, 
தேவகோட்டையை அடுத்த முப்பையூர் வாரச்சந்தை நேற்று கூடியது. இந்த சந்தையில் பெரும் கூட்டமாக இருந்தது. இதை தேவகோட்டை தாசில்தார் அந்தோணிராஜ் திடீரென ஆய்வு செய்தார். சமூக இடைவெளி இன்றி கடைகள் நெருக்கமாக போடப்பட்டு வியாபாரம் நடந்து வந்தது. இதனால் கொரோனா பரவல் ஏற்படும் சூழ்நிலை இருந்ததால் 5 கடைகளுக்கு அபராதம் விதித்தார். மேலும் அடுத்த வாரம் புதன்கிழமை கூடும் சந்தையின்போது கடை நடத்துபவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிந்து வருபவர் களுக்கு மட்டுமே காய்கறிகள், மீன் விற்பனை செய்ய வேண்டும் என கண்டிப் புடன் கூறினார்.

Next Story