ஆன்-லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியான விவகாரம்: முதுகலை ஆசிரியர் பணி இடமாற்றம்-முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு
ஆசிரியர் எடின்பரோ கோமகனை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடுகம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இயற்பியல் பாடப்பிரிவு முதுகலை ஆசிரியராக எடின்பரோ கோமகன் (வயது 54) வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி பிளஸ்-1 மாணவிகளுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தி கொண்டு இருந்தார். அப்போது திடீரென அரைகுறை ஆடையுடன் ஆபாச படம் வெளியானதாக கூறப்படுகிறது.
இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இயற்பியல் ஆசிரியர் எடின்பரோ கோமகனை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார். அதன்படி ஆசிரியர் கோமகன், மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story