பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குடல்வால்வு அகற்றம்
பேராவூரணி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குடல்வால்வை அரசு டாக்டர்கள் அகற்றினர்.
பேராவூரணி:
பேராவூரணி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குடல்வால்வை அரசு டாக்டர்கள் அகற்றினர்.
குடல்வால்வு அகற்றம்
பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி கலைச்செல்வி (வயது 34). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கான அவர் தனியார் மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்துள்ளார். அதில் குடல் வால்வு வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கலைச்செல்வி சிகிச்சை பெறுவதற்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
மருத்துவமனையில் கலைச்செல்வியை தலைமை மருத்துவர் பாஸ்கர், அறுவை சிகிச்சை டாக்டர் பிரசன்னா வெங்கடேசன், மயக்க மருந்து டாக்டர் சுதாகர் ஆகியோர் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு அறுவை சிகிச்சை நடத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். கடந்த 4-ந்தேதி நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் கலைச்செல்விக்கு குடல்வால்வு அகற்றப்பட்டது.
பாராட்டு
இந்தநிலையில் மருத்துவமனையில் இருந்து நேற்று கலைச்செல்வி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். அறுவை சிகிச்சை மூலம் குடல்வால்வை அகற்றிய அரசு டாக்டர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story