மாவட்ட செய்திகள்

லாரி மோதி அண்ணன்-தம்பி பலி + "||" + Larry kills brothers

லாரி மோதி அண்ணன்-தம்பி பலி

லாரி மோதி அண்ணன்-தம்பி பலி
லாரி மோதி அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்தனர்.
கீழப்பழுவூர்:

அண்ணன்-தம்பி
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்கள் அருள்(வயது 27), அஜித்குமார்(18). இவர்கள் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் திருவையாறு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
திருமானூரில் இருந்து ஏலாக்குறிச்சி செல்லும் சாலையில் சென்றபோது எதிரே மரம் ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருள் தலைநசுங்கியும், அஜித்குமார் பலத்த காயமடைந்தும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி அண்ணன்-தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் வாலிபர் பலி
கொட்டாம்பட்டி அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
2. மொபட் மீது கார் மோதி தொழிலாளி பலி; உறவினர்கள் சாலை மறியல்
மொபட் மீது கார் மோதி தொழிலாளி இறந்ததை தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் பலி
சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் உயிரிழந்தார்.
4. ரோட்டில் நின்றிருந்தவர் கார் மோதி சாவு
வாடிப்பட்டி அருகே ரோட்டில் நின்றிருந்தவர் கார் மோதி பலியானார்.
5. கார் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
கொட்டாம்பட்டி அருகே கார் மோதி தி.மு.க.பிரமுகர் பலியானார்.