சேலம் மாவட்டத்தில் 54 பேருக்கு தொற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 559 பேருக்கு சிகிச்சை


சேலம் மாவட்டத்தில் 54 பேருக்கு தொற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 559 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 9 Sept 2021 2:54 AM IST (Updated: 9 Sept 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 559 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சேலம்
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 57 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று 54 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சி பகுதியில் 12 பேரும், வீரபாண்டி, ஓமலூர், மகுடஞ்சாவடியில் தலா ஒருவரும், தாரமங்கலம், சங்ககிரி, நங்கவள்ளி, கொங்கணாபுரம், காடையாம்பட்டியில் தலா 2 பேரும், எடப்பாடி, சேலம் ஒன்றிய பகுதியில் தலா 3 பேரும், கொளத்தூரில் 4 பேரும் பாதிக்கப்பட்டனர்.
அதே போன்று பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், அயோத்தியாப்பட்டணத்தில் தலா ஒருவரும், வாழப்பாடி, ஆத்தூரில் தலா 3 பேரும் பாதிக்கப்பட்டனர். மேட்டூர் நகராட்சி பகுதியில் 8 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சேலத்துக்கு வந்த ஒருவரும் உள்பட மொத்தம் மாவட்டத்தில் 54 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று தடுப்பூசி 
அதன்படி இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 96 ஆயிரத்து 596 பேர் பாதித்து உள்ளனர். இதில் 94 ஆயிரத்து 396 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்று 2 பேர் தொற்றால் பலியானார்கள். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,641 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே மாவட்டத்தில் தற்போது 59 ஆயிரத்து 80 கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளது. இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள 526 மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.


Next Story