தென்காசியில் தொழிலாளி கீழே தள்ளி கொலை


தென்காசியில் தொழிலாளி கீழே தள்ளி கொலை
x
தினத்தந்தி 9 Sept 2021 3:27 AM IST (Updated: 9 Sept 2021 3:27 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி கீழே தள்ளி கொலை

தென்காசி:
தென்காசியில் கூலித்தொழிலாளி கீழே தள்ளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மருமகனை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
தென்காசி ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 51), கூலி தொழிலாளி. தென்காசி பாறையடி 2-வது தெருவை சேர்ந்த குருசாமி மகன் சுப்பிரமணியன் (34). இவர் தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறார்.
முருகனின் மாமா மகன் சுப்பிரமணியன்.
முருகனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து சுப்பிரமணியன் கடை முன்பு சத்தம் போட்டு பேசி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கீழே தள்ளி கொலை
வழக்கம் போல கடந்த 1-ந் தேதி இரவு 7.30 மணிக்கு சுப்பிரமணியன் கடை முன்பு வந்து முருகன் மீண்டும் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், முருகனை பிடித்து சத்தம் போட்டு கீழே தள்ளியுள்ளார். இதில் முருகனுக்கு தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8 மணிக்கு முருகன் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கொலை வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தார்.

Next Story