வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி நிலம் மீட்பு


வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி நிலம் மீட்பு
x
தினத்தந்தி 9 Sept 2021 10:27 AM IST (Updated: 9 Sept 2021 10:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வில்லிவாக்கத்தில் பிரசித்திபெற்ற அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலையில் இந்த கோவிலுக்கு சொந்தமான 6 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. ஆனால் வாடகைதாரர்கள் பல வருடங்களாக கோவிலுக்கு வாடகை பாக்கியை செலுத்தவில்லை.

இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து வாடகை தராத 6 கடைகளுக்கும் அதிகாரிகள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது. இதன் மூலம் அந்த கடைகள் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story