கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்ற 13 பேர் கைது


கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்ற 13 பேர் கைது
x
தினத்தந்தி 9 Sept 2021 1:58 PM IST (Updated: 9 Sept 2021 1:58 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 142 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

போலீசார் சோதனை
கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதை தடுக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி, சிப்காட் தொழிற்பேட்டை, சின்னஓபுளாபுரம் மாந்தோப்பு, தண்டலச்சேரி, தேர்வழி, மாதர்பாக்கம் ஏரிக்கரை, ரெட்டம்பேடு வலைக்கூண்டு, சிந்தலகுப்பம், முனுசாமிநகர், நாயுடுகுப்பம் மதகு ஆகிய இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்ட னர்.

13 பேர் கைது
அப்போது மேற்கண்ட இடங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 41), சிவக்குமார் (39), ஆனந்த் (38), ராஜேந்திரன் (48), மோகன் (48), கீழ்முதலம்பேடு குமார் (35), சிந்தலகுப்பம் சங்கர் (39), மாதர்பாக்கம் ஜேம்ஸ் (40), பூங்குளம் லோகநாதன் (25), நெல்வாய் திருநாவுக்கரசு (39), நாயுடுகுப்பம் சுப்பிரமணி (55), பேரையூர் முருகன் (33), வேல்முருகன் (22) ஆகிய 13 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 13 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 142 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story