ஸ்ரீவைகுண்டத்தில் 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


ஸ்ரீவைகுண்டத்தில் 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 9 Sept 2021 5:14 PM IST (Updated: 9 Sept 2021 5:14 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டத்தில் 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:
ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்துபாண்டி மகன் கணேசன் (வயது 28), ஆறுமுகம் மகன் சுடலைமுத்து (23) ஆகியோர் ஒரு கொலை முயற்சி வழக்கில் ஸ்ரீவைகுண்டம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து 2 பேரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்தனர். இதனால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கணேசன், சுடலைமுத்து ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.


Next Story