மாவட்ட செய்திகள்

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது + "||" + Worker arrested for threatening to kill wife

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது
மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
அல்லிநகரம்:
தேனி அல்லிநகரம் ஒண்டிவீரன் தெருவை சேர்ந்தவர் அரசன்(வயது 55). இவரது மனைவி சரோஜா(50). இவர்களது மகள் சத்யா (28). இவருக்கும் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை சேர்ந்த முருகேசனுக்கும்(34) திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முருகேசன் தன் மனைவியிடம் தினமும் தகராறு செய்து வந்தார். இதை நேற்று அரசனும், சரோஜாவும் தட்டிக்கேட்டனர். அப்போது முருகேசன் அவர்கள் 2 பேரையும் கீழே தள்ளிவிட்டு காயப்படுத்தினார். இதையடுத்து சத்யா கணவரை விலக்கி விட்டார். அப்போது ஆத்திரமடைந்த முருகேசன் மனைவியை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முகமது யாகியா வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தார்.