கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2021 4:35 PM GMT (Updated: 2021-09-09T22:05:19+05:30)

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகலாதன், பொருளாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், காட்பாடி தாலுகாவில் பணியாற்றிய 4 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குடியாத்தம் தாலுகாவில் வழங்கப்பட்ட பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரியும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கலந்தாய்வை முறையாக நடத்தி பணியிட மாறுதல் வழங்கக்கோரியும், மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில், சங்க நிர்வாகிகள், தாலுகா பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரேவேல்பாண்டியனை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.

Next Story