திருவண்ணாமலையில் 8 மாணவர்கள் உள்பட 11 பேருக்கு கொரோனா பாதிப்பு


திருவண்ணாமலையில் 8 மாணவர்கள் உள்பட 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 9 Sep 2021 5:09 PM GMT (Updated: 9 Sep 2021 5:09 PM GMT)

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 8 மாணவர்கள் உள்பட 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 8 மாணவர்கள் உள்பட 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பரிசோதனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பள்ளியில் மாணவர்களுக்கோ, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது. 

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறையும், மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
நேற்று முன்தினம் வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள், 5 மாணவர்கள் மற்றும் ஒரு ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

8 மாணவர்கள்

தொடர்ந்து பள்ளிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதை அடுத்த நேற்று வந்த பரிசோதனை முடிவில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த பள்ளி தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் ஆவூர் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 3 மாணவர்களுக்கும், ஐங்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் பெரியகரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஊழியர் ஒருவருக்கும், தொரப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும், போளூரில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆக மொத்தம் நேற்று ஒரே நாளில் 8 மாணவர்களுக்கும், 2 ஆசிரியர்களும், ஒரு ஊழியருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ள பள்ளிகள் 3 நாட்கள் மூடவும், அப்பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Next Story