கோலப்பன் ஏரியில் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிகை ஒத்திகை
பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிகை ஒத்திகை
திருவண்ணாமலை
ஜவ்வாதுமலையில் ஜமுனாமரத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம் சார்பாக வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோலப்பன் ஏரியில் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்று பேரிடர் காலத்தில் மக்களை மீட்பது எப்படி? என்பது குறித்த ஒத்திகைைய செய்து காண்பித்தனர்.
நிகழ்ச்சியில் துணைத் தாசில்தார் திருவேங்கடம், தீயணைப்பு வீரர்கள், ஜவ்வாதுமலை தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் கேசவன் மற்றும் முருகன், செல்வம், தாமோதரன், அண்ணாமலை பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story