விவசாயிகளுக்கு பயிற்சி


விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 9 Sep 2021 5:30 PM GMT (Updated: 2021-09-09T23:00:59+05:30)

பயிர் திட்ட அடிப்படையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நயினார்கோவில், 
நயினார்கோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக அக்கிரமேசி கிராமத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயிர் திட்ட அடிப்படையிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சைலஸ் தலைமை தாங்கினார். அவர் தலைமை உரையில் அதிக விளைச்சல் தரக்கூடிய சான்று அட்டை பொருந்திய விதை களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். பரமக்குடி உழவர் பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் கண்ணையா விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்குமாறு கேட்டுக் கொண்டார். ராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கரமணியன் பேசுகையில் வேளாண் தொழில் நுட் பங்களை கடைபிடித்து உணவு தானிய உற்பத்தியை பெருக்கு மாறு கேட்டுக்கொண்டார். வேளாண் உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு நாகராஜன், மண்வள அட்டை சார்ந்த உரப்பரிந்துரை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் கோவில் பானு பிரகாஷ், தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மானிய முறைகள் பற்றி விளக்கினார். விதைச்சான்று அலுவலர் சீராளன் நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள், ரகங்கள், விதை பண்ணை அமைக்கும் முறைகள் பற்றி விளக்கினார்.

Next Story