மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே விவசாயி, விஷம் குடித்து தற்கொலை + "||" + Farmer commits suicide by drinking poison

கள்ளக்குறிச்சி அருகே விவசாயி, விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே விவசாயி, விஷம் குடித்து தற்கொலை
போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி, 
கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.முகையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பெரியசாமி (வயது 30), விவசாயி. இவருக்கு செல்வராணி (26) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று பெரியசாமி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதையறிந்த செல்வராணி ஏன் தினந்தோறும் குடித்து விட்டு வீட்டுக்கு வருகிறீர்கள்? என கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த பெரியசாமி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெரியசாமி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்களை எதிர்த்து முழுஅடைப்பு; விவசாயிகளுக்கு கர்நாடக முதல்-மந்திரி எச்சரிக்கை
வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், கொரோனாவில் இருந்து இயல்பு நிலை திரும்பும் நேரத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது சரியல்ல என்று கூறி விவசாயிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
பெரிய காஞ்சீபுரம் வெள்ளக்குளத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 58). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி. 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சீனிவாசன் தனது அண்ணனுடன் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
3. உழவர் சந்தையில் விவசாயிகள் வருகை குறைந்தது
அரியலூரில் உழவர் சந்தையில் விவசாயிகள் வருகை குறைந்தது.
4. காரையூர் அருகே குறைந்த செலவில் மாசில்லாத இ-பைக்கை உருவாக்கிய விவசாயி பொதுமக்கள் பாராட்டு
காரையூர் அருகே குறைந்த செலவில் மாசில்லாத இ-பைக்கை உருவாக்கி சாதனை படைத்துள்ள விவசாயியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
5. விபத்தில் விவசாயி சாவு
விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.