மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே காரில் தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு + "||" + 3 pound jewelery flush with woman sleeping in car

வாணியம்பாடி அருகே காரில் தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

வாணியம்பாடி அருகே  காரில் தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
காரில் தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
வாணியம்பாடி

பெங்களூருவை சேர்ந்தவர்கள் கோவிந்தப்பா-லட்சுமி தம்பதி. இவர்கள் தங்கள் குடும்பத்துடன் சென்னையில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு காரில் புறப்பட்டனர். நேற்று அதிகாலையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது சாலையோரம் காரை நிறுத்திவிட்டு காரிலேயே தூங்கி உள்ளனர். அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், லட்சுமி (வயது 50) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். 

இதுகுறித்து லட்சுமி வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.