கொரோனா தடுப்பூசி சிறப்புமுகாம்


கொரோனா தடுப்பூசி சிறப்புமுகாம்
x
தினத்தந்தி 9 Sep 2021 5:58 PM GMT (Updated: 9 Sep 2021 5:58 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 12-ந்தேதி கொரோனா தடுப்பூசி போட சிறப்புமுகாம் நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 12-ந்தேதி கொரோனா தடுப்பூசி போட சிறப்புமுகாம் நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத்துறையின் மூலம் கொரோனா தடுப்பிற்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடத் துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- கொரோனா தடுப்பிற்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் பொது சுகாதாரத்துறை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மகளிர் திட்டம், நகராட்சிகள் நிர்வாகம், பேரூராட்சிகள் துறை, ஒருங்கி ணைந்த வளர்ச்சித்துறை, நேரு யுவகேந்திரா மற்றும் தேசிய மாணவர் படை, ரெட்கிராஸ், லைன்ஸ் கிளப் ஆகியோர் இணைந்து வருகிற 12-ந் தேதி தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.
 இதையொட்டி 700 இடங்களில் சிறப்பு தடுப்பூசி மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, முகாமில் கோவிசீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசி முகாம்களில் முதல்தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வதுடன் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அத்துடன் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும ்தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 
சிறப்பு முகாம்
முகாம் குறித்து வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் அந்தந்த பகுதியில் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி தலைவர்கள் பங்கேற்கும் வகையில் உடனடியாக கூட்டங்கள் நடத்தி ஒவ்வொரு பகுதியிலும் வீடுகள்தோறும் சிறப்பு முகாம் நடைபெறுவது குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி நடைபெறும் சிறப்பு முகாமில் முழுமையாக அனைத்துப்பகுதியிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலையை பொதுமக்களிடம் உருவாக்க வேண்டும். 
முதன்மை மாவட்டம்
12-ந்தேதி அதிக நபர்களுக்கு தடுப்பூசி போட்டு தமிழகத்தில் அன்று ஒருநாள் நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமில் சிவகங்கை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்ந்திடும் வகையில் பணிகளை திட்டமிட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு ராஜேந்திரன், மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம் கணேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராணி, , கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரெத்தினவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன், பிரபாகரன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்வானதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story