சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் தொழிலாளி கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 10 Sept 2021 12:04 AM IST (Updated: 10 Sept 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

க.பரமத்தி,
மதுரை மாவட்டம், விராலிப்பட்டியை சேர்ந்தவர் உமர் முக்தார் (வயது 46). இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 3 திருமணம் நடந்துள்ளது. ஆனால் யாருடனும் தற்போது குடும்பம் நடத்தவில்லை. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் தங்கி டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார். அப்போது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உமர் முக்தாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Next Story