பண்ருட்டி அருகே பரபரப்பு பேராசிரியர் வீட்டு கதவை உடைத்து ரூ.4 லட்சம் நகை கொள்ளை மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பண்ருட்டி அருகே பேராசிரியர் வீட்டு கதவை உடைத்து ரூ.4 லட்சம் நகை, பணத்தை கொள்யைடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் தெற்கு தெருவை தேர்ந்தவர் செல்வமணி (வயது 46). இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பணி காரணமாக, அவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இதனால், முத்தாண்டிக்குப்பத்தில் உள்ள அவரது வீடு பூட்டி இருந்தது. இந் தநிலையில் நேற்று காலை இவரது வீட்டு கதவு உடைந்து கிடந்தது. இதுபற்றி அக்கம்பக்கத்தினர் செல்வமணிக்கு தகவல் தெரிவித்தனர்.
நகை கொள்ளை
இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் கதவை உடைத்து, உள்ளே புகுந்து 11 பவுன் நகை, ரூ. 20 ஆயிரத்து 300 -ஐ கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story