டெல்லி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
டெல்லி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருச்சி
டெல்லியில் பெண் போலீஸ் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருச்சி பாலக்கரையில் த.மு.மு.க. தெற்கு மாவட்டம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பைஸ்அகமது முன்னிலை வகித்தார். த.மு.மு.க. மாநில பொருளாளா் சபியுல்லாகான், தி.க. மகளிர் பேரவை தலைவி அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். டெல்லி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது கோஷம் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story