சுரைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
வெம்பக்ேகாட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுரைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் எட்டக்காபட்டி, ரெட்டியாபட்டி, சிப்பிப்பாறை, குகன்பாறை, செவல்பட்டி, அலமேலுமங்கைபுரம், அம்மையார்பட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சுரைக்காய் பயிரிடபட்டுள்ளது. சென்ற மாதம் வரை ஒரு சுரைக்காய் ரூ.20 வரை விற்பனையானது. ஆனால் கடந்த சில நாட்களாக ஒரு சுரைக்காய் ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனையாகிறது. இதனால் பறிப்பு கூலி கூட கிடைக்காததால் விவசாயிகள் வேதனையில் சுரைக்காய்களை பறிக்காமலேயே கொடிகளில் விட்டுள்ளனர். விலை இல்லாத காரணத்தால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
Related Tags :
Next Story