மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Government employee commits suicide

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
தக்கலை அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பத்மநாபபுரம், 
தக்கலை அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்
தக்கலை அருகே உள்ள கீழ கல்குறிச்சி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் (வயது 59).ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர். இவருடைய மனைவி ஆன்டணி அமலா (51). இவர், தக்கலை யூனியன் முன்னாள் கவுன்சிலரும், தமிழக மகிளா காங்கிரஸ் மாநில செயலாளரும் ஆவார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.
அய்யப்பன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அய்யப்பன் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையில் அய்யப்பன் தூங்கச் சென்றார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் கணவர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த ஆன்டணி அமலா, அங்கு சென்று பார்த்தார். அப்போது, அய்யப்பன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர், இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தக்கலை (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சேக் அப்துல் காதர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 இதுகுறித்து ஆன்டணி அமலா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.