மாவட்ட செய்திகள்

பூச்சி மருந்தை குடித்து பெண் தற்கொலை + "||" + death

பூச்சி மருந்தை குடித்து பெண் தற்கொலை

பூச்சி மருந்தை குடித்து பெண் தற்கொலை
பூச்சி மருந்தை குடித்து பெண் தற்கொலை
மொரப்பூர், செப்.10-
கம்பைநல்லூர் அருகே பூச்சி மருந்தை குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இளம்பெண்
 தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா கம்பைநல்லூரை  அடுத்த பள்ளத்தூரைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி மாதம்மாள் (வயது 35). மாதம்மாள் வயிற்று வலியால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலையில் வீட்டில் இருந்த அவர், பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வந்தது. அப்படி இருந்தும் மாதம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தினர்.
இறந்த மாதம்மாளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மாதம்மாள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.