டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு


டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 10 Sep 2021 5:04 PM GMT (Updated: 2021-09-10T22:34:11+05:30)

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

தேனி: 

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும் குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. 

தேர்ந்த வல்லுனர்களை கொண்டு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. பயிற்சியின் போது இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்துக்கும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். வினாடி-வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும். எனவே, போட்டித் தேர்வுகள் எழுதுவதில் ஆர்வமுள்ள மனுதாரர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம். பயிற்சி வகுப்பில் சேர மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story