மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகேவரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு + "||" + Case against 6 people

கள்ளக்குறிச்சி அருகேவரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி அருகேவரதட்சணை கேட்டு பெண்ணை  கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
வழக்கு
கள்ளக்குறிச்சி, 
கள்ளக்குறிச்சி அருகே உள்ள திருக்கனங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கிரிதரன் (வயது 38). லாரி டிரைவரான இவருக்கும் கள்ளக்குறிச்சி கரியப்ப நகரை சேர்ந்த பார்வதி(35) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் பார்வதியின் நடத்தையில் கிரிதரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், தனது மனைவியை, அவருடைய தாய் வீட்டில் விட்டுவிட்டு வந்து விட்டார். 
சம்பவத்தன்று திருக்கனங்கூருக்கு சென்ற பார்வதி தனது கணவரை சந்தித்து ஏன் என்னை வீட்டுக்கு அழைத்து செல்ல வரவில்லை என கேட்டுள்ளார். அதற்கு கிரிதரன் மற்றும் அவருடைய பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து, பார்வதியிடம் 20 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கவேண்டும் என கூறி, அவரை திட்டி, தாக்கி, மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கிரிதரன், அவருடைய தந்தை ராமசாமி, தாய் மீனாட்சி, சகோதரர் வெங்கடேசன், வெங்கடேசன் மனைவி சுதா மற்றும் ஜான்சிராணி ஆகிய 6 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. கார் பட்டறை உரிமையாளரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
வேலாயுதம்பாளையம் அருகே கார் பட்டறை உரிமையாளரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. போலி கிரைய பத்திரம்; 6 பேர் மீது வழக்கு
சுரண்டை அருகே போலி கிரைய பத்திரம் பதிந்ததாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3. கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை; கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.