அரசின் திட்டங்கள் கடைசி குடிமகனுக்கும் சென்றடைய பாடுபடுவேன். புதிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேட்டி

அரசின் திட்டங்கள் கடைசி குடிமகனுக்கும் சென்றடைய பாடுபடுவேன். புதிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 10 Sep 2021 5:38 PM GMT (Updated: 10 Sep 2021 5:38 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கடைசி குடிமகனுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய பாடுபடுவேன் என்று புதிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கடைசி குடிமகனுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய பாடுபடுவேன் என்று புதிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

புதிய கலெக்டர் பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டராக தெ.பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். 

மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் புதிய கலெக்டருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 
பின்னர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடைசி குடிமகனுக்கும்

அரசு அறிவிக்கும் திட்டங்கள், சலுகைகள் அனைத்தும் மாவட்டத்தின் கடைசி குடிமகனுக்கு சென்றடைய பாடுபடுவேன். கொரோனா தடுப்பூசி செலுத்தி மக்களை பாதுகாப்பதே முதல் பணியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள பாஸ்கர பாண்டியன் 2005-ம் ஆண்டு திருச்சி பயிற்சி துணை கலெக்டராக பணியில் சேர்ந்தார். தற்போது மாநில திட்டக்குழு செயல் உறுப்பினராக பணிபுரிந்து வந்து மாறுதலாகி வந்துள்ளார்.

Next Story