மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது + "||" + Worker arrested for sexually harassing 6 year old girl

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
திண்டிவனத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம், 

திண்டிவனம் ரோஷணை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 56). தொழிலாளி. இவரது மனைவி டில்லி(50). இவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக உள்ளார்.  இந்தநிலையில் நேற்று முன்தினம் டில்லி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த வெங்கடேசன், அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை டி.வி. பார்க்க வருமாறு வீட்டிற்கு அழைத்து வந்தார். 

பாலியல் தொல்லை 

பின்னர் அந்த சிறுமிக்கு வெங்கடேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். இது குறித்து சிறுமியின் தந்தை, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.